Wednesday, September 17, 2008

ரயில்வே மருத்துவமனையில் ஒரு இரவுப் பொழுது

எனதன்பு அம்மா சுகமில்லாமல் சமீபத்தில் உடல் சுகமில்லாமல் போகவே ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் எவ்வளவோ தனியார் மருத்துவமனையில் அம்மாவைச் சேர்க்க கோரியும், அப்பா கேட்கவேயில்லை. வேறு வழியின்றி எனது அக்கா அன்று அம்மாவுடன் தங்கி பணிவிடை செய்ய நேர்ந்தது விட்டது. பேருக்கு அண்ணன் என்ற உறவு பார்த்து விட்டு சென்றதாக ஞயாபகம். அடுத்த நாள், அக்கா என்னை மருத்துவமனையில் தங்க சொல்ல, நானும் சரியென்று சென்று விட்டேன்.
மருத்துவமனை என்கிற பெயரில் நான் நரகத்தை சந்தித்து விட்டேன் அன்று. எட்டு மணிக்கு அம்மாவிற்கு எடுத்து சென்ற சாப்பாட்டைக் கொடுத்து விட்டு, நானும், சாப்பிட்டுவிட்டு தட்டை அலம்பச் சென்றேன். கடவுளே! அப்படியொரு மோசமான அலம்பும் இடத்தை நான் என் ஜென்மத்தில் பார்க்கக்கூடாது. எனக்கு மயக்கமே வந்து விட்டது. பிறகு, படுக்க செல்வதற்கு முன் அம்மாவை கழிக்கும் அறைக்கு கூட்டிச் செல்லும் கட்டம். கழிக்கும் அறியா அது? கடவுளே? எனது அம்மாவை ஏன் இப்படி ஒரு இடத்தில் வந்து கிடக்க வேண்டும் என்று திட்டியே விட்டேன். அடுத்து, தூங்கும் கட்டம். படுத்த நொடியிலிருந்து ஒரே கொசுவின் ஓலம். சுத்தமாகத் தூங்க இயலவில்லை. கொசுவின் கொடிய கஷ்டத்திலும், அம்மா அயர்ந்தது தூங்கிக் கொண்டிருந்த்தார்கள், மாத்திரையின் மயக்கத்தில். நானோ சுத்தமாகத் தூங்கவேயில்லை. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே நேரத்தை கழித்துக்கொண்டிருந்தேன். என் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. ஏன் இப்படி வயதானோர், நமது சொல் பேச்சைக் கேட்க மாட்டேன்கிறார்கள். நம்மை ஏன் எப்படி ஒரு கஷ்டத்திற்கு ஆளாகிகொண்டிருகிறார்கள்? கைபோனை எடுத்து பாட்டு கேட்கலாமென எடுத்தேன். அதுவும் பிடிக்கவில்லை. எப்படியோ இரவு பொழுது கழிந்தது. காலையும் வந்தது. திரும்பவும், அந்த கழிக்கும் அறைக்கு போகும் கட்டம், மனதை என்னவோ செய்தது. இர்ந்த்டாலும், வெளிக் காட்டிகொள்ளாமல் அம்மாவிற்கு வேண்டிய பணிவிடையைச் செய்தேன்.

நாங்கள் அக்கா தங்கை மூன்று பேரும் சேர்ந்து அம்மாவை, ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் திறன் உள்ளவர்கள்தாம். ஆனால், எனது பெற்றோரோ பெண்கள் தயவில் வாழப் பிடிக்காத பழைய எண்ணம் கொண்டவர்களாக இன்னும் இருக்கிறார்கள். என்ன செய்வது? இப்படியே அவர்களை விட்டு விடுவது தான் எங்கள் எண்ணமும். திருத்த இயலாது என்று, நாங்கள் எங்களை விட்டு கொடுத்து அவர்களுக்கு பணிவிடை செய்வது என்ற முடிவிற்கே வந்து விட்டோம்.

No comments: