Wednesday, September 5, 2007

Today is Teachers' Day!!!


எனக்கு என்னுடைய 3வது வகுப்பு ஞாபகம் வந்து விட்டது.

டீச்சர் : எல்லொரும் கிழக்கே பார்த்து நிற்கிறோம். பிள்ளைகளே , உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ராஜேஸ்வரீ, இப்பொழுது சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்.
டீச்சர்: இல்லை தவறு. அனைவரும், என்னப்பார்த்து, திரும்பி நில்லுங்கள். உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ராஜேஸ்வரீ, இப்பொழுது சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்!!
டீச்சர்: இல்லை திரும்பியும் தவறு. அனைவரும், என்னப்பார்த்து, திரும்பி நில்லுங்கள். உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ரம்யா, இப்பொழுது நீ சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
ரம்யா: மேற்கு டீச்சர்.
டீச்சர்: சரியாக சொன்னாய் ரம்யா!
நான் : ???
டீச்சர்: எல்லொரும், வீட்டில் போய் படித்து விட்டு வாருங்கள், நாளை, நான் மறுபடியும், இதே கேள்வியை கேட்பேன், சரியா பிள்ளைகளே?
மறு நாள் ...
டீச்சர் : எல்லொரும் கிழக்கே பார்த்து நிற்கிறோம். பிள்ளைகளே , உங்கள் முன்னால் தெரிவது கிழக்கு, பின்னால் இருப்பது மேற்கு, இடது கைப்பக்கம் இருப்பது வடக்கு, வலது கைப்பக்கம் இருப்பது தெற்கு.இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள்.ம்ம்..ராஜேஸ்வரீ, இப்பொழுது சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்!!
டீச்சர் : சரியாய் சொல்லிவிட்டாய் !, இன்று.
டீச்சர் : இப்பொழுது, எல்லோரும், அப்படியே திரும்பி நில்லுங்கள். ம்ம்.. ரம்யா இப்பொழுது நீ சொல், உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
ரம்யா : மேற்கு டீச்சர் நான் (அவசர அவசரமாக!!) : டீச்சர், தவறாக சொல்லி விட்டாள்!. நம் முன் இருப்பது எப்பொழுதும் கிழக்குதானே?!?!
டீச்சர் : (என்னைப் பார்த்து, ஒரு முறைப்பாய்) வெளியே சென்று, நன்றாக நான் சொன்னதை நினைவு படுத்தி, படித்து விட்டு வா!!!
சிறிது நேரத்திற்க்குப் பிறகு, "ராஜேஸ்வரி, உள்ளே வா, திரும்பி, நில். உன் முன்னாடி இருக்கும் திசை என்ன?
நான் : கிழக்கு டீச்சர்!!

அதற்க்கப்புறம், என் கையில் இருந்த புத்தகம், வெளியே, பறந்ததும், நான், ஒரு மணியளவு முட்டி போட்டுக் கொண்டிருந்ததும், பசுமையான நினைவுகள். நீண்ட நாட்களுக்கு, எது மேற்கு, என்கிற, சந்தேகம், எனக்கு இருக்கத்தான் செய்தது. இப்பொதும், யாருக்காவது, வழி சொல்லும் கட்டாயம் நேர்ந்தால், சத்கியம்மாக திசையை வைத்து சொல்வதேயில்லை. எல்லம் சுசீலா டீச்சர் ஞாபகம் தான்!!!