Wednesday, May 23, 2007

சென்னை

விண்ணைத் தொடும் தென்னை மரங்களும்
கண்ணைக் கவரும் கடலோரமும் நாற்றமிக்க கூவக் கரைகளும்
அதில் ஒண்டி வாழும் ஓலைக் குடிசைகளும்
வானைத்தொடும் அடுக்கு மாடிகளும்,

அதில்மனதில் ஒட்டாத மனிதர்கள் வாழும் கலையும்
கோலோச்சும் கல்வி மையங்களும்

வால் வீசும் விளம்பர அட்டைகளும்
அடாவடி செய்யும் ஆட்டோக்காரர்களும்

அண்டிப் பிழைக்க வந்த தண்ணீர் தர மறுக்கும் அண்டை மா நிலமக்களும்
தண்ணீர் பஞ்சமென்றாலும், அதிசயமாய் ஒன்றாக வாழும் அனைத்து அண்டைவாழ் மக்களும்
சிறிய தெருக்களில் கூட லாவகமாகச் செல்லும் கார்களும்

30 அடி தெருக்கள் 6 லேன் சிஸ்டமாக வேலை செய்யும் மாயமும்சிக்னலுக்கு மதிப்புக் கொடுக்காத, படித்த மேதாவிகளையும்
அழகிய அபிராமி மாலும்,

அங்கே ஸ்னோ வோர்ல்ட் என்கிற பெயரில் மக்களுக்கு, அண்டர்டிகா பார்க்கும் அனுபவமும், அங்கேயும் கூட மூலைகளில் துப்பி ஸ்னோ மேலும், சிவப்புக்கோலம் போடும், நமது கலை விற்ப்பன்னர்களையும்
ஐனாக்ஸ் என்னும் பணம் பிடுங்கும் திரையரங்கமும், அதே சமயம், கமலா, ஜெயந்தி போன்ற 'சுகாதாரமிக்க' திரையரங்கங்களையும்
5 ஸ்டார், 3ஸ்டார், போன்ற, பெரிய ஓட்டல்களும்,

அவைகளுக்கெதிரிலேயே அமைதியாய் தொழில் செய்யும், சுண்டல் வண்டிகளும்
எங்கேயும் காணும், பூக்காரிகளையும், பழக்காரிகளையும், அவர்கள் பேசும் 'ரம்யமான' வார்த்தைகளும்!!!?!!!
அப்பப்பா!!! சொல்லிக்கொண்டே போகலாம், நமது சென்னையைப் பற்றி!!!

Wednesday, May 2, 2007

பெரியார் - திரைப்படம்

பெரியார் - திரைப்படம், நேற்று பார்த்தேன்। உண்மையிலேயே, வெகு நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல படத்தைப் பார்த்த அனுபவம்।

சத்யராஜ், பெரியாராகவே வாழ்ந்து இருக்கிறார்। வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும், தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்। ஒரு மனிதனின், 92 வருட பயணத்தை, 3ஏ மணி நேரங்களில், காண்பிப்பது என்பது, மிகச் சிரமமான காரியம்தான். இயக்குனர், மிக நன்றாகக் கையாண்டு இருக்கிறார்.

படத்தின் முற்பகுதி, பெரியாரின், இளமைப் பருவமும், காதல், கல்யாணப்பருவமும், அவரது, எதிர்கால வாழ்க்கைக்யின், போக்கிற்க்கான அடிக்கல்களும், நம்மை ஒரு எதிர்பார்ப்போடு, நிமிர்ந்து உட்காரச் செய்கிறது। பிற்பகுதியில், அவரது கொள்கைகள், அவரது, கோட்பாடுகள், அவரது சிந்தனைகள், இக்கால சந்ததியினருக்கு, நல்ல விதத்தில் புரியும்படி சொல்லியிருக்கிறார்கள்। கடவுளா, கல்லா என்கிற பாட்டு, நம்மை சிந்திக்க வைக்கிறது. தாழ்ந்த சாதியினர் இன்று, தலை நிமிர்ந்து கோவிலுக்குள், தாம் எப்படி நுழைய முடிகிறது, என்று பெரியாரை நினைத்து, பெருமைப்பட்டுக்கொள்ளலாம். விதவைப்பெண்கள், கணவன் இறந்ததினால், அவர்களுடைய எதிர்காலம், இன்று, இருட்டறையில் இல்லாது, வாழ்க்கையில், ஒளியைக்க் காணும், மனோதிடம், எங்கிருந்து, வித்திட்டது என அறிந்துக் கொள்ளலாம். குலத்தொழில் என்று ஒன்றில்லாமல், செருப்பு தைப்பவன் பிள்ளை இன்று எப்படி, பொறியாளர் ஆக முடிகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

படம் நெடுகிலும், பெரியாராக வாழ்கிற சத்யராஜுக்கு, நிஜமாகவே விருது கொடுக்ககலாம்.
குஷ்பு, ஜோதிர்மயி, மனோரமா, தங்களது, திறம் பட நடிக்கும் திறனை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
மொத்ததில் பெரியார், தேவை நாட்டுக்கு. இன்றைய இளைஞர்களுக்கு!!!
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும், நவ நாகரீக மக்களுக்கு, மேல் நாட்டு மோகம் கொண்டு நம் நாட்டு நிலையறியாத மக்களுக்கு இப்படம், நிச்சயம், தன்னிலையை அறிந்து கொள்ள உதவும்.
சத்யராஜின் திரைப்பயணத்தில், இப்படம், ஒரு மைல்கல் என்பது, நிச்சயம்।

வேண்டும், இப்படிப்பட்ட படங்கள், நாட்டிற்கு।