Wednesday, September 17, 2008

கனத்த மனதோடு ஒரு கல்யாணம்!

சமீபத்தில் நான் முக்கியமான ஒரு கல்யாணத்திற்கு போக வேண்டிய கட்டாயம். கல்யாண கூடத்திற்குள் நுழையும் கணத்தில், ஒரு சிறிய யுவதி. அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டு இருந்தது. அக் கண்ணீர், என்னை ரொம்பவும் சங்கடப் படுத்திவிட்டது. நான் ஏதோ ஒரு வகையில் அப்பெண்ணின் சொந்தம் என்பதால் அவள் கண் கலங்கியதற்கு எனக்கு காரணம் தெரியும். எனக்கும் அந்த கலக்கம் ஒட்டிக்கொண்டது. மனம் கனத்து விட்டது. அன்று காலைதான் எனது தாயும் உடல் சுகமில்லாமல் அப்போல்லோவில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார். எல்லாமாகச் சேர்ந்து, கனத்த மனதோடு நான் பங்கு கொண்ட கல்யாணம் இது ஒன்றாகவே இருக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டு வீடு திரும்பினேன்.

அப்பெண்ணைப் பார்த்து இப்படி எனக்கு சொல்லத் தோன்றியது!
கலங்காதே பெண்ணே !
இதயம் இப்போது கனத்தாலும், உனக்கும் காத்திருக்கிறது, ஒரு நல்ல எதிர்காலம்.!!!

1 comment:

Anonymous said...

don't know the reason behind her tears.. hope she is happy afer the wedding