Tuesday, November 23, 2010

மைனா !!!

என்னை வெகுவாக கவர்ந்த படம்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒரு தனிப்பட்ட முறையிலேயே அமைக்கப்பட்டு இருக்கிறது.

தெனாவெட்டான எதற்கும் உபயோகப்படாத அப்பா!
புருஷனை இழந்து அப்பா வீட்டிலேயே ஒட்டிக்கொண்ட அக்கா! அவள் தன் தகப்பனுக்கு தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுத்ததை அப்பா பீற்றி கொள்ளும் காட்சி நிஜமாகவே நெஞ்சை கவர்ந்தது.
எப்படியோ நல்ல விதமாக தன மகளை வளர்த்து கட்டிக் கொடுக்க நினைக்கும் குருவம்மா!
அழகான சுருள் சுருளான அவள் வார்க்கும் பணியாரங்கள்!
எதற்கும் அடங்காத கதாநாயகன், மைனவையே மனைவியாக, தாயாக, குழந்தயாக பாவிக்கும் சுருளி !
வெர்நியர் அளவு கோலை பற்றி வெள்ளந்தியாக அவன் கேட்கும் கேள்வி!
இரவு முழுதும் சைக்கிள் ஒட்டி மைனாவை, டைனமோ வெளிச்சத்தில் படிக்க வைக்கும் நெகிழ்ச்சி!
கதாநாயகனைப் போலவே தானும் ஒரு ஹீரோ போல் வரும் ஒரு சிறுவன் !
ஊருக்கு போலீஸ் ஆக இருந்தாலும் வீட்டில் மனைவியை அடக்கி ஆளத் தெரியாத சேது!
கணவன் நிலை தெரியாது, தன் அம்மா வீட்டு வறட்டு பிடிவாதம் தாங்கி வாழும் அவசரகுடுக்கை சேதுவின் மனைவி !
மனைவி மேல் கடும் பாசம் வைத்திருக்கும் ஏட்டு!
வெறும், ஒரு நிமிடம், கைத்தொலை பேசியிலேயே மனதை கவரும் ஏட்டின் மனைவி!
சுனாமியே வந்தாலும் குடித்து விட்டு அலையும், பஸ்ஸில் வரும் கதாபாத்திரம் !
வாழ்க்கையை ஒரு சிறிய விபத்திலேயே புரிய வைக்கும் அந்த பேருந்து!
அழகும், பொறுமையும் ஒன்றாக குடியிருக்கும், சுருளியை தவிர உலகில் வேறொன்றும் அறியாத மைனா!
எனக்கு பிடிக்காத. நான் விரும்பாத, ஆனால் வெகு எதார்த்தமான முடிவு!

No comments: