Wednesday, May 23, 2007

சென்னை

விண்ணைத் தொடும் தென்னை மரங்களும்
கண்ணைக் கவரும் கடலோரமும் நாற்றமிக்க கூவக் கரைகளும்
அதில் ஒண்டி வாழும் ஓலைக் குடிசைகளும்
வானைத்தொடும் அடுக்கு மாடிகளும்,

அதில்மனதில் ஒட்டாத மனிதர்கள் வாழும் கலையும்
கோலோச்சும் கல்வி மையங்களும்

வால் வீசும் விளம்பர அட்டைகளும்
அடாவடி செய்யும் ஆட்டோக்காரர்களும்

அண்டிப் பிழைக்க வந்த தண்ணீர் தர மறுக்கும் அண்டை மா நிலமக்களும்
தண்ணீர் பஞ்சமென்றாலும், அதிசயமாய் ஒன்றாக வாழும் அனைத்து அண்டைவாழ் மக்களும்
சிறிய தெருக்களில் கூட லாவகமாகச் செல்லும் கார்களும்

30 அடி தெருக்கள் 6 லேன் சிஸ்டமாக வேலை செய்யும் மாயமும்சிக்னலுக்கு மதிப்புக் கொடுக்காத, படித்த மேதாவிகளையும்
அழகிய அபிராமி மாலும்,

அங்கே ஸ்னோ வோர்ல்ட் என்கிற பெயரில் மக்களுக்கு, அண்டர்டிகா பார்க்கும் அனுபவமும், அங்கேயும் கூட மூலைகளில் துப்பி ஸ்னோ மேலும், சிவப்புக்கோலம் போடும், நமது கலை விற்ப்பன்னர்களையும்
ஐனாக்ஸ் என்னும் பணம் பிடுங்கும் திரையரங்கமும், அதே சமயம், கமலா, ஜெயந்தி போன்ற 'சுகாதாரமிக்க' திரையரங்கங்களையும்
5 ஸ்டார், 3ஸ்டார், போன்ற, பெரிய ஓட்டல்களும்,

அவைகளுக்கெதிரிலேயே அமைதியாய் தொழில் செய்யும், சுண்டல் வண்டிகளும்
எங்கேயும் காணும், பூக்காரிகளையும், பழக்காரிகளையும், அவர்கள் பேசும் 'ரம்யமான' வார்த்தைகளும்!!!?!!!
அப்பப்பா!!! சொல்லிக்கொண்டே போகலாம், நமது சென்னையைப் பற்றி!!!

No comments: