Wednesday, April 18, 2007

மனதைத் தொட்ட ஒரு நிகழ்வு

அதிகாலை வேளை। மக்கள் தனது அன்றைய வாழ்வுக்கான அடிக்கல்களை போடும் நேரம். நான் என்னுடைய உடம்பில் உள்ள சர்க்கரையையும், கொழுப்பையும் குறைக்கும் நோக்கத்துடன் நடக்க ஆரம்பித்தேன்.

போகும் வழியில், ஒரு 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியும், 65- 70 வயது மதிக்கத்தக்க ஒரு கிழவரும் எனக்கு முன் நடந்து கொண்டு இருக்கிறார்கள்। என் மனம் சொல்கிறது, ஆதங்கப் படுகிறது, எனக்கு வயதானால், இப்படி என் கணவர் என்னுடன் இப்படி ஆதரவாக வருவாரா, என்று. ம்ம்ம், யோசித்துக்கொண்டே அவர்களைத் தாண்டி செல்கிறேன்.

காத்தாடி ராமமூர்த்தியும் அவரது துணைவியாரும், எனக்கு முன்னே செல்ல அவர்களையும் தாண்டி செல்கிறேன்। என் மனது சொல்கிறது, என் வயது, அவர்களை இவ்வளவு எளிதாகத் தாண்டிச் செல்ல வைக்கிறது என்று. மனம் மீண்டும் அசை போடுகிறது. என்னுடன் , நடப்பவர்கள் பாதிக்கு பதி, இப்படிப்பட்ட முதியவர்கள் தான்.

இவர்கள் அனைவரும், எதோ ஒரு வகையில் சம்பாதித்து, அவர்கள் பிள்ளைகளை வாழ வைத்து விட்டு வாழ்க்கயின் விடுமுறையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்। ஆனால், விடுமுறையை சுகமாக அனுபவிக்க இயலாமல், நோய் வாய் பட்டு, நடக்க இயலாமல், கோல் ஊன்றி கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.

இப்போதெல்லாம், தோராயமாக, மக்கள், 50 வயதிலேயே, பிள்ளைகளை ஏதோ ஒரு முறையில், இந்தியாவிற்க்குள்ளோ, அயல் நாடுகளிலோ, அவர்களது வாழ்வின் தரத்தை உயர்த்தி, நல்ல நிலைமைக்கு கொண்டு விட்டு விட்டு, ஒதுங்கிக் கொள்கிறார்கள்।

ஒதுங்கி விட்டவுடன், நிம்மதி என்று நினைத்து, தனிமை என்ற ஒரு நிலைமைக்குத் தள்ளப் பட்டுவிடுகிறார்கள்। கணவன் மனைவியைச் சார்ந்தும், மனைவி கணவனைச் சார்ந்தும் வாழ ஆரம்பிக்கிறார்கள். இடையில் , ஒருவருக்கு உடம்பு முடியாமல் போனால் அடுத்தவர் துடித்துப்ப் போகிறார்கள்.

இதைப் பார்க்கும் என் மனம், இவர்கள், வாழ்க்கையில் , ரயில் பயணம் செல்லும், ஒரு பயணியைப்போல் ஜீவிக்கிறார்கள் என்றே சொல்கிறது। எங்கே, தனது சகப் பயணி இறங்கி தாம் இன்னும் தனிமைக்குத் தள்ளப் பட்டுவிடுவோமொ என்று பயப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே காலத்தைக் கழிக்கிறார்கள். இருவரும் ஒன்றாகவே ரயிலை விட்டு இறங்க வேண்டுமென பேராசைப் படுகிறார்கள். பிள்ளைகள், பேரக்குழந்தைகள் எல்லாம் ஒரு எல்லக்குள்ளேதான் என்று உணர்கிறார்கள்.

இப்போது நாம் , முதலில் பார்த்த வயதான ஜோடிக்கு வருவோம்। வயதான அம்மாவிற்க்கு, நடக்க முடியாமல் போகிறது. தாத்தா ரொம்ப பயந்து போகிறார். "கீழே உக்காந்துக்க்கோ" என்கிறார். "வழியே என்கேயாவது, தண்ணீர் கிடைக்கறாதா என்று பார்க்கட்ட்டுமா" என்று கரிசனப்படுகிறார்.

இவர்களைக் கடந்து, திரும்ப வீடு நோக்க்கிச் செல்கிறேன் நான். என் மனம் கேட்கிறது?

What is the purpose of Life!!

1 comment:

Anonymous said...

//What is the purpose of Life!!//

உண்மை...