இன்றிலிருந்து நான் "ஏன்" என்கிற தலைப்பில் சில விஷயங்களை எழுதலாம் எனவிருக்கிறேன். எனக்கு விடை தெரியாததால் இதை எழுதவில்லை. விடை தெரிந்தும் சில மன ஆற்ராமைக்காகவும் மன மாச்சர்யங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த பகுதியை ஆரம்பித்து இருக்கிறேன்.
பாதசாரிகளுக்கான பாலங்களை பலரும் பயன் படுத்துவதே இல்லை. ஏன்? பாலங்களை பயன் படுத்தக் கோரி அரசு மக்களுக்கு அறிவுருத்தாதது அரசின் குற்றமா? அல்லது மக்களின் அறியாமையா... உதாரணத்திற்கு, பெருங்குடி அருகில் அழகிய பாலம் ஒன்று, மக்களின் பயன்பாட்டிற்காக, வண்ணமயமாக பெயிண்ட் எல்லாம் அடித்து, அமைச்சர் ஒருவரால், ஆரவராமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன பயன்? அனைத்து மக்களும், டிராபிக் ஜாம் செய்யவே விருப்பபடுகிறார்கள். பேருந்திலிருந்து இறங்கியவுடன், தெருவைக் கடக்க அனைத்து வேகமாக வரும் வண்டிகளைப் பற்றியும், தன்னுடைய உயிரைப் பற்றியும் கவலையே படாமல், வெகு லாகவமாக தெருவைக் கடக்கிறார்கள். பாலம் என்ற ஒன்று இருப்பதாகவே யாருக்கும் நினைவிருப்பதாக தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையை வேகமாக கடக்க விரும்புவதில்லை. அனுபவிக்க விரும்புகிறார்கள். ஆனால் ரோட்டைக் கடக்கும் விஷயத்தில் வேகத்தை விரும்புகிறார்கள்............. ஏன்?
No comments:
Post a Comment