எனக்கு சத்குரு சமீபத்தில் விஜய் டிவி பேட்டி ஒன்றில் சொல்லிய கதை ரொம்பவும் பிடித்தது.
கிருஷ்ணதேவராயர் ஒரு நாள் கலை நடை பயிலுவதற்கு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஓர் வெள்ளை முக்காடு போட்டுக் கொண்டு ஓர் உருவம், பெரிய மரத்தின் பின் நின்று கொண்டிருந்ததது. ராஜா அந்த உருவத்தை முன்னே வரும்படி ஆணையிட்டார். உருவமும் முன்னால் வந்து நின்றது. ராஜா தன்னை பார்த்து ஏன் ஒளிந்து இருக்கிறாய் என வினவ, அந்த உருவம் தான் ஒரு வண்ணான் எனவும், அவன் காலை வேளையில் ராஜா முன்னால் வரக்கூடாது என்றும் ஒளிந்து இருப்பதாகவும் சொன்னான். இதை ஆமோதித்த ராஜா கிடு கிடு வென திரும்ப அரண்மனை அலுவல்களை பார்க்க ஓடி விட்டார். அரன்த்மனையில் சிறிது நேரத்திற்கு பிறகு, அவருக்கு காலை உணவு, ஏதோ காரணத்தினால், செரிக்காமல், வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. யோசித்த ராஜா, இதற்கு, தான் காலையில் வண்ணான் முகத்தில் விழித்ததே கரணம் என எண்ணி, வண்ணானை வரச் செய்து, அவனுக்கு மரண தண்டனை விதித்து விட்டான். அப்போது , தெனாலி ராமன் அங்கே வர, அழுது கொண்டிருந்த வண்ணானைப் பார்த்து, என்ன ஆயிற்று என கேட்டான். வண்ணான், நடந்ததைக் கூறி, நான் என்ன தவறு செய்தேன், ராஜாதானே என்னை முன்னே வரச் செய்தார் என சொல்லி, தன குடும்பம் தான் இல்லாமல் என்ன செய்யும் எனப் புலம்பலானான். தெனாலியும் எதைக் கேட்டு விட்டு, சரி இரு பார்க்க்கலாம் என கூறி விட்டு, தானும் ஒரு முக்காடு போட்டுக்கொண்டு, ராஜா முன்னால் போய் அமர்ந்தான். இதைப் பார்த்த ராஜா என்ன இது என நகைத்தான். தெனாலி, ராஜா, நீங்களோ, ஒரு பார்வை வண்ணானைப் பார்த்ததில் வயிறு கேட்டு விட்டது என்கிறீர்கள், வண்ணனோட தலைவிதியை பார்த்தீர்களா உங்களை அவன் காலையில் பார்த்ததில் அவனுக்கு மரண தண்டனையே கிடைத்து விட்டதே... அதனால் உங்களைப் பார்த்தால் எனக்கு என்ன நேரமோ என்று கேட்டன். தெனாலியின் இந்த கேள்வியை கேட்டு, ராஜா திகைத்து போய் விட்டான். இறுதியில் தனது மூட நம்பிக்கையை உணர்ந்து, வண்ணானை விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
நமக்கு எது நடந்தாலும், அது நம்முடைய நடவைக்கையாலேயே.. எப்படி அடுத்தவர் மீத்து பழி போட்டு மனதை திருப்தி பண்ணிக் கொள்ள முடியும்?
இதனால், நரி முகத்தில் விழித்தல் நல்லது நடக்கும், பூனை குறுக்கே வந்தால், தீயது நடக்கும் என்பதெல்லாம் பொய், மூட நம்பிக்கை என்கிறார் சத்குரு...
ஆனால், பாழும் மனம், சில சமயம், நமது நல்லது கெட்டவைகள் நடப்பதை அடுத்தவர் மேல் ஏற்ற தயங்குவதே இல்லை. என்ன சொல்கிறீர்கள்?
No comments:
Post a Comment