Tuesday, November 30, 2010

என் இனிய திருப்பதி வெங்கடேஷ்வரா!!!

தாயின் கர்ப்பகிரஹத்திலிருந்து நான் வெளியேறிய அன்று ஆரம்பித்த
Push!!! Push!!! Push!!!
உன்னை தரிசித்து
உன் கர்ப்பகிரஹத்திலிருந்து ஒவ்வொரு முறையும் நான் வெளியே வரவும் கடும்
Push!!! Push!!! Push!!! செய்ய வைக்கின்றாயே!
இது முறையா?

தர்மத்தில் தரிசிக்க வரும் கூட்டம், எம்மைப் போல் கையூட்டு கொடுத்து வரும் கூட்டத்தோடு இணையும்
கட்டத்தில்
தர்மங்கள் ஏன் அதர்மங்களாகி எம்மை இம்சிக்கின்றது?
இந்நிலை மாறுமா?
எம் அடுத்த தலைமுறையும் தலைமுடி இறக்கி
அதர்மங்களை சந்திக்கும் நிலை வேண்டுமோ?

கருவறைகளும் பள்ளியரைகளும் மடப்பள்ளிகளும் கொழிக்கும் உனது கோவிலுள்
கழிவறைகள் இல்லாதது முறையோ?
பல மணி நேரம் கால் கடுக்க, முகம் கோண, மனம் வெதும்பி உன்னை தரிசித்து
வரும் உன் பக்தனுக்கு நீ காட்டும் பிரசாதப் பரிவு என்னை வியக்க வைக்கின்றது!
ஆனால்
பல மணி நேரம் நின்று உன்னை தரிசித்த உன் குழந்தைகள்
உடலுள் உள்ள இயற்க்கை கழிவை அடக்கி உன் பிரசாதம் உண்ட பின்
வெளியேற இயலுமோ?

மாற்றங்கள் கொண்டு வர மனிதனுக்கு சொல்லித் தர தேவையில்லை!
IIT களும், IIM களும், நிறைந்த நம் நாட்டில்
அறிவிற்கு பஞ்சமில்லை...
அளவு கடந்த அறிவாளிகள், கடல் கடந்து ஏற்றுமதி செய்யப்படுவதால்
ஆளின்றி தவிக்கிறோம்
மாற்றம் கொண்டு வர!

வெங்கடேஷ்வரா!!! எம்மை காப்பாற்ற உன்னாலும் முடியாது!!!

Sunday, November 28, 2010

Lateral Thinking

எனக்கு சத்குரு சமீபத்தில் விஜய் டிவி பேட்டி ஒன்றில் சொல்லிய கதை ரொம்பவும் பிடித்தது.

கிருஷ்ணதேவராயர் ஒரு நாள் கலை நடை பயிலுவதற்கு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஓர் வெள்ளை முக்காடு போட்டுக் கொண்டு ஓர் உருவம், பெரிய மரத்தின் பின் நின்று கொண்டிருந்ததது. ராஜா அந்த உருவத்தை முன்னே வரும்படி ஆணையிட்டார். உருவமும் முன்னால் வந்து நின்றது. ராஜா தன்னை பார்த்து ஏன் ஒளிந்து இருக்கிறாய் என வினவ, அந்த உருவம் தான் ஒரு வண்ணான் எனவும், அவன் காலை வேளையில் ராஜா முன்னால் வரக்கூடாது என்றும் ஒளிந்து இருப்பதாகவும் சொன்னான். இதை ஆமோதித்த ராஜா கிடு கிடு வென திரும்ப அரண்மனை அலுவல்களை பார்க்க ஓடி விட்டார். அரன்த்மனையில் சிறிது நேரத்திற்கு பிறகு, அவருக்கு காலை உணவு, ஏதோ காரணத்தினால், செரிக்காமல், வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. யோசித்த ராஜா, இதற்கு, தான் காலையில் வண்ணான் முகத்தில் விழித்ததே கரணம் என எண்ணி, வண்ணானை வரச் செய்து, அவனுக்கு மரண தண்டனை விதித்து விட்டான். அப்போது , தெனாலி ராமன் அங்கே வர, அழுது கொண்டிருந்த வண்ணானைப் பார்த்து, என்ன ஆயிற்று என கேட்டான். வண்ணான், நடந்ததைக் கூறி, நான் என்ன தவறு செய்தேன், ராஜாதானே என்னை முன்னே வரச் செய்தார் என சொல்லி, தன குடும்பம் தான் இல்லாமல் என்ன செய்யும் எனப் புலம்பலானான். தெனாலியும் எதைக் கேட்டு விட்டு, சரி இரு பார்க்க்கலாம் என கூறி விட்டு, தானும் ஒரு முக்காடு போட்டுக்கொண்டு, ராஜா முன்னால் போய் அமர்ந்தான். இதைப் பார்த்த ராஜா என்ன இது என நகைத்தான். தெனாலி, ராஜா, நீங்களோ, ஒரு பார்வை வண்ணானைப் பார்த்ததில் வயிறு கேட்டு விட்டது என்கிறீர்கள், வண்ணனோட தலைவிதியை பார்த்தீர்களா உங்களை அவன் காலையில் பார்த்ததில் அவனுக்கு மரண தண்டனையே கிடைத்து விட்டதே... அதனால் உங்களைப் பார்த்தால் எனக்கு என்ன நேரமோ என்று கேட்டன். தெனாலியின் இந்த கேள்வியை கேட்டு, ராஜா திகைத்து போய் விட்டான். இறுதியில் தனது மூட நம்பிக்கையை உணர்ந்து, வண்ணானை விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.

நமக்கு எது நடந்தாலும், அது நம்முடைய நடவைக்கையாலேயே.. எப்படி அடுத்தவர் மீத்து பழி போட்டு மனதை திருப்தி பண்ணிக் கொள்ள முடியும்?
இதனால், நரி முகத்தில் விழித்தல் நல்லது நடக்கும், பூனை குறுக்கே வந்தால், தீயது நடக்கும் என்பதெல்லாம் பொய், மூட நம்பிக்கை என்கிறார் சத்குரு...
ஆனால், பாழும் மனம், சில சமயம், நமது நல்லது கெட்டவைகள் நடப்பதை அடுத்தவர் மேல் ஏற்ற தயங்குவதே இல்லை. என்ன சொல்கிறீர்கள்?

Tuesday, November 23, 2010

மைனா !!!

என்னை வெகுவாக கவர்ந்த படம்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒரு தனிப்பட்ட முறையிலேயே அமைக்கப்பட்டு இருக்கிறது.

தெனாவெட்டான எதற்கும் உபயோகப்படாத அப்பா!
புருஷனை இழந்து அப்பா வீட்டிலேயே ஒட்டிக்கொண்ட அக்கா! அவள் தன் தகப்பனுக்கு தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுத்ததை அப்பா பீற்றி கொள்ளும் காட்சி நிஜமாகவே நெஞ்சை கவர்ந்தது.
எப்படியோ நல்ல விதமாக தன மகளை வளர்த்து கட்டிக் கொடுக்க நினைக்கும் குருவம்மா!
அழகான சுருள் சுருளான அவள் வார்க்கும் பணியாரங்கள்!
எதற்கும் அடங்காத கதாநாயகன், மைனவையே மனைவியாக, தாயாக, குழந்தயாக பாவிக்கும் சுருளி !
வெர்நியர் அளவு கோலை பற்றி வெள்ளந்தியாக அவன் கேட்கும் கேள்வி!
இரவு முழுதும் சைக்கிள் ஒட்டி மைனாவை, டைனமோ வெளிச்சத்தில் படிக்க வைக்கும் நெகிழ்ச்சி!
கதாநாயகனைப் போலவே தானும் ஒரு ஹீரோ போல் வரும் ஒரு சிறுவன் !
ஊருக்கு போலீஸ் ஆக இருந்தாலும் வீட்டில் மனைவியை அடக்கி ஆளத் தெரியாத சேது!
கணவன் நிலை தெரியாது, தன் அம்மா வீட்டு வறட்டு பிடிவாதம் தாங்கி வாழும் அவசரகுடுக்கை சேதுவின் மனைவி !
மனைவி மேல் கடும் பாசம் வைத்திருக்கும் ஏட்டு!
வெறும், ஒரு நிமிடம், கைத்தொலை பேசியிலேயே மனதை கவரும் ஏட்டின் மனைவி!
சுனாமியே வந்தாலும் குடித்து விட்டு அலையும், பஸ்ஸில் வரும் கதாபாத்திரம் !
வாழ்க்கையை ஒரு சிறிய விபத்திலேயே புரிய வைக்கும் அந்த பேருந்து!
அழகும், பொறுமையும் ஒன்றாக குடியிருக்கும், சுருளியை தவிர உலகில் வேறொன்றும் அறியாத மைனா!
எனக்கு பிடிக்காத. நான் விரும்பாத, ஆனால் வெகு எதார்த்தமான முடிவு!