மாலை 4 மணி. வெகு மிதமான traffic. எதற்கோ வீட்டிற்கு போக வேண்டும் போல இருந்தது. அலுவலகத்தில் சொல்லி விட்டு கிளம்பினேன். காரை எடுத்து office வாசலில் இருந்து வெளியே வந்து சிக்னல் அருகாமையை பார்த்து, 4 நொடிகள் இருப்பதை கவனித்து, காரை எப்படியும், சிக்னலில் நிறுத்த வேண்டியிருக்கும் என judge செய்து மெதுவாக வந்து நிறுத்தினேன். ஒரு நொடிதான் ஆகியிருக்கும். டமார்ர்ர்ரர்ர்ர்ர் ........என்ன நடக்கிறது திரும்பி பார்க்கவில்லை நான். எதற்கோ steering wheel ல் இருந்து கையை எடுத்து விட்டேன், கால் எதற்கோ accelerate செய்கிறது மெதுவாக....எனது இடது பக்கமும் வலது பக்கமும் சிக்னலுக்காக wait செய்பவர்கள் எதற்கோ, முன்னே வா முன்னே வா, என்று கூப்பிடுகிறார்கள். எப்படியோ, கார் நகர்ந்து முன்னே வந்து அந்த triangular park முன்னாடி நிறுத்திவிட்டேன். சிக்னல் விட்ட வுடன் 19D பஸ் டிரைவர் பஸ் உள்ளே இருந்த படியே கையை அசைத்து அவன் மேல் ஒன்றும் mistake இல்லாத மாதிரி சைகை செய்தான். நான் அவனை கீழே வரச் செய்து "சிக்னலில்" நான் பாட்டுக்கு "தேமே" என்று தானே நின்று கொண்டிருந்தேன் (வடிவேலு style ல் தேடி வந்து மோதுவான்களோ ?!!?) நீ எதற்கு இவ்வளவு வேகமாய் வந்தாய் என்று கேட்டேன். இதற்கிடையில் , இவரை mobile ல் கூப்பிட்டு கூப்பிட்டு வெறுத்து போய் விட்டேன். இவர் ஒரு training ல் மாட்டிக் கொண்டு phone ஐ எடுக்கவேயில்லை. ரொம்ப மனம் வெறுத்து என்ன செய்வது? என திருப்பி திருப்பி இவரை கூப்பிட்டுகொண்டே இருந்தேன். பஸ் டிரைவரும் கண்டக்டரும் வேணுமென்றால் ஒரு 100 ருபாய் கொடுக்கிறோம் என்று compensation mode க்கு என்னை அழைக்க , வாழ்க்கையே வெறுத்து விட்டேன் நான். கூட்டம் கூடியது. கார் வேறு திறந்து கிடக்கிறது, கிட்டத்தட்ட கார் trunk என்னப்பார்த்து அழுவது போல் இருந்தது. திறந்து கிடக்கும் காருக்குள் laptop வேறு. நேரம் ஆக ஆக என்னை லேசாய் பயம் வேறு தொற்றிக்கொள்ள, படபடப்பு உச்சக்கட்டத்திற்கு செல்கிறது. சிறிது நேரம் , கழித்து, அவரே என்னை அழைத்து அவர்கள் இருவரும் government servants... விட்டு விடு அவர்களை பிழைத்து போகட்டும், என்று சொல்ல, பஸ் டிரைவர் என் கால்களில் "டபக்" கென்று என் கால்களில் விழுகிறான். என்ன செய்ய?
அவர்களை மன்னித்து விட்டு விட்டு, லொட லொட வெனும் ஆடும், அக்கு வேறு ஆணி வேறு என சொல்வோர்களே அது போல, காரை எடுத்துக் கொண்டு, 2nd gear லேயே வீட்டிற்கு மெதுவாக வந்து சேர்ந்தேன்.
நினைத்து பார்க்கையில், என் காரின் முன்னாடி, வேறு ஏதாவது vehicle நின்று இருந்தால், நிச்சயம், எதாவது அசம்பாவிதம், நடந்திருக்கும் எனவே நினைக்கிறேன். இன்னும் படபடப்பு அடங்கவேயில்லை.
நானும், மற்றவர்கள் போல் , சிக்னலை skip செய்திருந்தால், இந்த துரதிர்ஷ்டம் நிகழ்ந்திருக்கதோ என ரொம்பவே நினைக்கிறேன்.
சொல்லுங்கள் யார் மேல் தவறு?
Very unfortunate..............
1 comment:
Neenga senjathu correct thaan. Signal skip panni, opposite'la vera yaaravathu vanthu idichiruntha innum prachanai perisa vanthurukum. Ippo oru nimmathi "atleast namma mela thappu illanu"
Post a Comment