தாயின் கர்ப்பகிரஹத்திலிருந்து நான் வெளியேறிய அன்று ஆரம்பித்த
Push!!! Push!!! Push!!!
உன்னை தரிசித்து
உன் கர்ப்பகிரஹத்திலிருந்து ஒவ்வொரு முறையும் நான் வெளியே வரவும் கடும்
Push!!! Push!!! Push!!! செய்ய வைக்கின்றாயே!
இது முறையா?
தர்மத்தில் தரிசிக்க வரும் கூட்டம், எம்மைப் போல் கையூட்டு கொடுத்து வரும் கூட்டத்தோடு இணையும்
கட்டத்தில்
தர்மங்கள் ஏன் அதர்மங்களாகி எம்மை இம்சிக்கின்றது?
இந்நிலை மாறுமா?
எம் அடுத்த தலைமுறையும் தலைமுடி இறக்கி
அதர்மங்களை சந்திக்கும் நிலை வேண்டுமோ?
கருவறைகளும் பள்ளியரைகளும் மடப்பள்ளிகளும் கொழிக்கும் உனது கோவிலுள்
கழிவறைகள் இல்லாதது முறையோ?
பல மணி நேரம் கால் கடுக்க, முகம் கோண, மனம் வெதும்பி உன்னை தரிசித்து
வரும் உன் பக்தனுக்கு நீ காட்டும் பிரசாதப் பரிவு என்னை வியக்க வைக்கின்றது!
ஆனால்
பல மணி நேரம் நின்று உன்னை தரிசித்த உன் குழந்தைகள்
உடலுள் உள்ள இயற்க்கை கழிவை அடக்கி உன் பிரசாதம் உண்ட பின்
வெளியேற இயலுமோ?
மாற்றங்கள் கொண்டு வர மனிதனுக்கு சொல்லித் தர தேவையில்லை!
IIT களும், IIM களும், நிறைந்த நம் நாட்டில்
அறிவிற்கு பஞ்சமில்லை...
அளவு கடந்த அறிவாளிகள், கடல் கடந்து ஏற்றுமதி செய்யப்படுவதால்
ஆளின்றி தவிக்கிறோம்
மாற்றம் கொண்டு வர!
வெங்கடேஷ்வரா!!! எம்மை காப்பாற்ற உன்னாலும் முடியாது!!!
Started this blog, in the view of spending some time in the blog to let people know about me and my thoughts. The events and the references mentioned in this blog does not pin point anyone in the real life and I do not have any intention to hurt anybody through this blog. Cheer Up!! Have Fun!!! Be Cool!!!
Tuesday, November 30, 2010
Sunday, November 28, 2010
Lateral Thinking
எனக்கு சத்குரு சமீபத்தில் விஜய் டிவி பேட்டி ஒன்றில் சொல்லிய கதை ரொம்பவும் பிடித்தது.
கிருஷ்ணதேவராயர் ஒரு நாள் கலை நடை பயிலுவதற்கு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஓர் வெள்ளை முக்காடு போட்டுக் கொண்டு ஓர் உருவம், பெரிய மரத்தின் பின் நின்று கொண்டிருந்ததது. ராஜா அந்த உருவத்தை முன்னே வரும்படி ஆணையிட்டார். உருவமும் முன்னால் வந்து நின்றது. ராஜா தன்னை பார்த்து ஏன் ஒளிந்து இருக்கிறாய் என வினவ, அந்த உருவம் தான் ஒரு வண்ணான் எனவும், அவன் காலை வேளையில் ராஜா முன்னால் வரக்கூடாது என்றும் ஒளிந்து இருப்பதாகவும் சொன்னான். இதை ஆமோதித்த ராஜா கிடு கிடு வென திரும்ப அரண்மனை அலுவல்களை பார்க்க ஓடி விட்டார். அரன்த்மனையில் சிறிது நேரத்திற்கு பிறகு, அவருக்கு காலை உணவு, ஏதோ காரணத்தினால், செரிக்காமல், வயிறு வலிக்க ஆரம்பித்து விட்டது. யோசித்த ராஜா, இதற்கு, தான் காலையில் வண்ணான் முகத்தில் விழித்ததே கரணம் என எண்ணி, வண்ணானை வரச் செய்து, அவனுக்கு மரண தண்டனை விதித்து விட்டான். அப்போது , தெனாலி ராமன் அங்கே வர, அழுது கொண்டிருந்த வண்ணானைப் பார்த்து, என்ன ஆயிற்று என கேட்டான். வண்ணான், நடந்ததைக் கூறி, நான் என்ன தவறு செய்தேன், ராஜாதானே என்னை முன்னே வரச் செய்தார் என சொல்லி, தன குடும்பம் தான் இல்லாமல் என்ன செய்யும் எனப் புலம்பலானான். தெனாலியும் எதைக் கேட்டு விட்டு, சரி இரு பார்க்க்கலாம் என கூறி விட்டு, தானும் ஒரு முக்காடு போட்டுக்கொண்டு, ராஜா முன்னால் போய் அமர்ந்தான். இதைப் பார்த்த ராஜா என்ன இது என நகைத்தான். தெனாலி, ராஜா, நீங்களோ, ஒரு பார்வை வண்ணானைப் பார்த்ததில் வயிறு கேட்டு விட்டது என்கிறீர்கள், வண்ணனோட தலைவிதியை பார்த்தீர்களா உங்களை அவன் காலையில் பார்த்ததில் அவனுக்கு மரண தண்டனையே கிடைத்து விட்டதே... அதனால் உங்களைப் பார்த்தால் எனக்கு என்ன நேரமோ என்று கேட்டன். தெனாலியின் இந்த கேள்வியை கேட்டு, ராஜா திகைத்து போய் விட்டான். இறுதியில் தனது மூட நம்பிக்கையை உணர்ந்து, வண்ணானை விடுதலை செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
நமக்கு எது நடந்தாலும், அது நம்முடைய நடவைக்கையாலேயே.. எப்படி அடுத்தவர் மீத்து பழி போட்டு மனதை திருப்தி பண்ணிக் கொள்ள முடியும்?
இதனால், நரி முகத்தில் விழித்தல் நல்லது நடக்கும், பூனை குறுக்கே வந்தால், தீயது நடக்கும் என்பதெல்லாம் பொய், மூட நம்பிக்கை என்கிறார் சத்குரு...
ஆனால், பாழும் மனம், சில சமயம், நமது நல்லது கெட்டவைகள் நடப்பதை அடுத்தவர் மேல் ஏற்ற தயங்குவதே இல்லை. என்ன சொல்கிறீர்கள்?

Tuesday, November 23, 2010
மைனா !!!
என்னை வெகுவாக கவர்ந்த படம்.
இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்துமே ஒரு தனிப்பட்ட முறையிலேயே அமைக்கப்பட்டு இருக்கிறது.
தெனாவெட்டான எதற்கும் உபயோகப்படாத அப்பா!
புருஷனை இழந்து அப்பா வீட்டிலேயே ஒட்டிக்கொண்ட அக்கா! அவள் தன் தகப்பனுக்கு தீபாவளிக்கு துணி எடுத்துக் கொடுத்ததை அப்பா பீற்றி கொள்ளும் காட்சி நிஜமாகவே நெஞ்சை கவர்ந்தது.
எப்படியோ நல்ல விதமாக தன மகளை வளர்த்து கட்டிக் கொடுக்க நினைக்கும் குருவம்மா!
அழகான சுருள் சுருளான அவள் வார்க்கும் பணியாரங்கள்!
எதற்கும் அடங்காத கதாநாயகன், மைனவையே மனைவியாக, தாயாக, குழந்தயாக பாவிக்கும் சுருளி !
வெர்நியர் அளவு கோலை பற்றி வெள்ளந்தியாக அவன் கேட்கும் கேள்வி!
இரவு முழுதும் சைக்கிள் ஒட்டி மைனாவை, டைனமோ வெளிச்சத்தில் படிக்க வைக்கும் நெகிழ்ச்சி!
கதாநாயகனைப் போலவே தானும் ஒரு ஹீரோ போல் வரும் ஒரு சிறுவன் !
ஊருக்கு போலீஸ் ஆக இருந்தாலும் வீட்டில் மனைவியை அடக்கி ஆளத் தெரியாத சேது!
கணவன் நிலை தெரியாது, தன் அம்மா வீட்டு வறட்டு பிடிவாதம் தாங்கி வாழும் அவசரகுடுக்கை சேதுவின் மனைவி !
மனைவி மேல் கடும் பாசம் வைத்திருக்கும் ஏட்டு!
வெறும், ஒரு நிமிடம், கைத்தொலை பேசியிலேயே மனதை கவரும் ஏட்டின் மனைவி!
சுனாமியே வந்தாலும் குடித்து விட்டு அலையும், பஸ்ஸில் வரும் கதாபாத்திரம் !
வாழ்க்கையை ஒரு சிறிய விபத்திலேயே புரிய வைக்கும் அந்த பேருந்து!
அழகும், பொறுமையும் ஒன்றாக குடியிருக்கும், சுருளியை தவிர உலகில் வேறொன்றும் அறியாத மைனா!
எனக்கு பிடிக்காத. நான் விரும்பாத, ஆனால் வெகு எதார்த்தமான முடிவு!

Saturday, August 14, 2010
எலியட்ஸ் கடற்கரையில் நடை பயிற்சி
எலியட்ஸ் கடற்கரையில் இன்று நடப்பதற்கு சென்றேன். கொஞ்சம் கூட்டம் அதிகம் தான் . ஆனால் வெகுவாகவே மனதை கவர்ந்து விட்டது.
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. நமது சென்னை நமது சென்னை தான். இரண்டு வாரம் முன்பு பாண்டிசெர்ரியில் கிடைக்காத ஒரு திருப்தி இன்று சென்னையிலேயே கிடைத்து விட்டது!!!

Thursday, July 15, 2010
பெண்மை
சோகத்தின் விளிம்பில் என் கண்ணீர் தானாக உருண்டோடியதைக் கண்டு எனக்கே ஆச்சர்யமாய் உள்ளது!
எதற்கு இப்படி ஒரு மன நிலை?
என்னுடைய வயது கூட என்னை தடுக்கவில்லை ?
என் மனம் எப்போது இவ்வளவு பலஹீனமானது?
இதுதான் பெண்மையின் இலக்கணமோ?
எதற்கு இப்படி ஒரு மன நிலை?
என்னுடைய வயது கூட என்னை தடுக்கவில்லை ?
என் மனம் எப்போது இவ்வளவு பலஹீனமானது?
இதுதான் பெண்மையின் இலக்கணமோ?
Thursday, April 15, 2010
என் மன வானில்!
என் மன வானில்
சிறகடிக்கும் சில்லென்ற நினைவுகள்
அழ வைக்கும் கசப்புகள்
எப்போதும் அலை பாயும் மன ஓட்டங்கள்......
என்று மாற்றி மாற்றி என்னை சித்திரவதை செய்துசிதரடிக்கின்றதே!
வானில் நிலவும் இருக்கிறது
புள்ளியாய் தெரிந்து மறையும் நட்சத்திரமும் இருக்கிறது
கார் மேகங்களும் இருக்கிறது!
மனதில் குளிர்ந்த நினைவுகளும் இருக்கிறது
கரும் புள்ளிகளாய் கசப்புகளும் இருக்கிறது
வாழ்க்கை ஓட்டத்தின் கார் மேகங்களும் இருக்கிறது!
நல்ல நினைவுகளை குளிர்ந்த நிலாவாகவும்
மன ஓட்டங்களை பார்வையில் நிலைக்காமல் மறைந்து போகும் நட்சத்திரமாகவும்
கசப்புகளை கலைந்து போகும் மேகமாகவும்
பாவிக்க கற்று கொண்டிருக்கிறேன் !!!
மிகக் கடினமாகத்தான் இருக்கிறது!

Sunday, March 28, 2010
அங்காடி தெரு!!!!
அங்காடி தெருவில்
என் உணர்வுகளை காசாக்கி நல்ல காதல் கவிதையை
வாங்கி வந்தேன்
இனி சரவணா stores சென்றால் அங்கே உலாவும் கடை பணியாளர்கள் என் நன் மதிப்பை கட்டாயம் பெறுவார்கள் என்பது உறுதி......
Basic Human Rights என்று ஒன்று இருப்பதை இது போன்ற கடை முதலாளிகளுக்கு படம் போட்டு காட்டி விட்டார் வசந்தபாலன் .....
அஞ்சலி அழகிய கவிதையாய் உலா வருகிறார்... அருமையான நடிப்பு... நிறைய இடங்களில் நம்மை அழ வைக்கிறார்...
இப்படி கூட ஒரு வயிற்று உணவிற்கு அடித்துக் கொள்ளும் அகோர நிலைமையா நம் சென்னையில்? அழுகிறது மனம்.
ஏ கடை முதலாளிகளே !! கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள்... மனம் இறங்கி ஏழைகளையும் கொஞ்சம் வசதிகளோடு, அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து வாழ விடுங்கள்....
அங்காடி தெருவில் விற்பவை அனைத்தும் அனைவருக்கும் இல்லை... "Life style" சென்று 1000 ரூபாய்க்கு teddy bear வாங்கும் கூட்டத்திற்கு இல்லை இந்த அங்காடி..........
----------------------------------------------------------------------------------------
-------

Sunday, February 14, 2010
காயமே இது பொய்யடா.... இது காற்றடைத்த பையடா!!!
என் மனது காயப்படும் போது அழுகிறது
அது காயப்படுத்தியவ்ருக்கு தெரிவதில்லை.........புரிவதுமில்லை
காயபட்டிருக்கிறது என்று தெரியப்படுத்துவது
அவசியமா என்றும் தெரியவில்லை
காயங்களுக்கு நல்ல மாற்று மௌனமே என்று நினைக்கத் தோன்றுகிறது.......
எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்க்கையில் ஏமாற்றங்களையும் எதிர் கொள்ள வேண்டிய பக்குவம் மௌனத்தில் கிடைக்குமோ என்று ஏங்குகிறேன்.....

Thursday, January 28, 2010
யார் மேல் தவறு?
மாலை 4 மணி. வெகு மிதமான traffic. எதற்கோ வீட்டிற்கு போக வேண்டும் போல இருந்தது. அலுவலகத்தில் சொல்லி விட்டு கிளம்பினேன். காரை எடுத்து office வாசலில் இருந்து வெளியே வந்து சிக்னல் அருகாமையை பார்த்து, 4 நொடிகள் இருப்பதை கவனித்து, காரை எப்படியும், சிக்னலில் நிறுத்த வேண்டியிருக்கும் என judge செய்து மெதுவாக வந்து நிறுத்தினேன். ஒரு நொடிதான் ஆகியிருக்கும். டமார்ர்ர்ரர்ர்ர்ர் ........என்ன நடக்கிறது திரும்பி பார்க்கவில்லை நான். எதற்கோ steering wheel ல் இருந்து கையை எடுத்து விட்டேன், கால் எதற்கோ accelerate செய்கிறது மெதுவாக....எனது இடது பக்கமும் வலது பக்கமும் சிக்னலுக்காக wait செய்பவர்கள் எதற்கோ, முன்னே வா முன்னே வா, என்று கூப்பிடுகிறார்கள். எப்படியோ, கார் நகர்ந்து முன்னே வந்து அந்த triangular park முன்னாடி நிறுத்திவிட்டேன். சிக்னல் விட்ட வுடன் 19D பஸ் டிரைவர் பஸ் உள்ளே இருந்த படியே கையை அசைத்து அவன் மேல் ஒன்றும் mistake இல்லாத மாதிரி சைகை செய்தான். நான் அவனை கீழே வரச் செய்து "சிக்னலில்" நான் பாட்டுக்கு "தேமே" என்று தானே நின்று கொண்டிருந்தேன் (வடிவேலு style ல் தேடி வந்து மோதுவான்களோ ?!!?) நீ எதற்கு இவ்வளவு வேகமாய் வந்தாய் என்று கேட்டேன். இதற்கிடையில் , இவரை mobile ல் கூப்பிட்டு கூப்பிட்டு வெறுத்து போய் விட்டேன். இவர் ஒரு training ல் மாட்டிக் கொண்டு phone ஐ எடுக்கவேயில்லை. ரொம்ப மனம் வெறுத்து என்ன செய்வது? என திருப்பி திருப்பி இவரை கூப்பிட்டுகொண்டே இருந்தேன். பஸ் டிரைவரும் கண்டக்டரும் வேணுமென்றால் ஒரு 100 ருபாய் கொடுக்கிறோம் என்று compensation mode க்கு என்னை அழைக்க , வாழ்க்கையே வெறுத்து விட்டேன் நான். கூட்டம் கூடியது. கார் வேறு திறந்து கிடக்கிறது, கிட்டத்தட்ட கார் trunk என்னப்பார்த்து அழுவது போல் இருந்தது. திறந்து கிடக்கும் காருக்குள் laptop வேறு. நேரம் ஆக ஆக என்னை லேசாய் பயம் வேறு தொற்றிக்கொள்ள, படபடப்பு உச்சக்கட்டத்திற்கு செல்கிறது. சிறிது நேரம் , கழித்து, அவரே என்னை அழைத்து அவர்கள் இருவரும் government servants... விட்டு விடு அவர்களை பிழைத்து போகட்டும், என்று சொல்ல, பஸ் டிரைவர் என் கால்களில் "டபக்" கென்று என் கால்களில் விழுகிறான். என்ன செய்ய?
அவர்களை மன்னித்து விட்டு விட்டு, லொட லொட வெனும் ஆடும், அக்கு வேறு ஆணி வேறு என சொல்வோர்களே அது போல, காரை எடுத்துக் கொண்டு, 2nd gear லேயே வீட்டிற்கு மெதுவாக வந்து சேர்ந்தேன்.
நினைத்து பார்க்கையில், என் காரின் முன்னாடி, வேறு ஏதாவது vehicle நின்று இருந்தால், நிச்சயம், எதாவது அசம்பாவிதம், நடந்திருக்கும் எனவே நினைக்கிறேன். இன்னும் படபடப்பு அடங்கவேயில்லை.
நானும், மற்றவர்கள் போல் , சிக்னலை skip செய்திருந்தால், இந்த துரதிர்ஷ்டம் நிகழ்ந்திருக்கதோ என ரொம்பவே நினைக்கிறேன்.
சொல்லுங்கள் யார் மேல் தவறு?
Very unfortunate..............

Wednesday, January 27, 2010
Lost Ring
We all had a fun trip to vedanthangal yesterday. Hey..it was real fun. Kids enjoyed and usual fun and enjoyment along with puking feelings of kids etc..in the car.
The car approached vedanthangal, and my sister's son puked.......oh..my...Ok..stop the car...wash, change etc....
At vedanthangal, resume the fun and enjoyment...My sis face was not so good..
Asked her whats the matter... she told me slowly, that she lost her ring somewhere and that too, it is her engagement ring....oh my..i felt bad..
Vedanthangal birds were good and i felt those birds looked very smart and stayed in one place without going around and disturbing us.
Finally we had to return back... some one gave an idea of searching for the ring at the place where my sis's son vomitted and we all searched.........here..there..over the bushes ... over the service road....
ohhh... there in the middle of the road...one glitter .... yeah...all that glittered was gold ..
my sis spotted the lost ring... great job by the family.
returned back home with great joy...

Subscribe to:
Posts (Atom)