Wednesday, August 6, 2008

கோபம்

கோபம் என்பது மனித இயல்பா? பரம்பரையில் வருவதா? அல்லது மனிதன் தானாகவே சேர்த்துக் கொள்ளும் ஒரு சொத்தா? இந்த கோபம் ஏன் வருகிறது? இதைக் கட்டுப்படுத்த யோகா போன்ற முறைகளை செய்பவருக்கு கூட கோபம் வருகிறதே ஏன்? கோபம் என்பது, தன்னுடைய இயலாமையை மற்றவருக்கு புலப்படுத்தும் ஒரு வழி என்று நான் நம்புகிறேன். தன்னுடைய இயலாமையை தானே உணர்ந்த்தவருக்கு கோபமே வராது என்று நம்புகிறேன்.

எனக்கு தெரிந்த ஒருவர் யோகா செய்து கொண்டிருக்கும் வேளையில் அவர் இருந்த அறையை அவர் மனைவி கூட்டி பெருக்கினாள், அது அவர் யோகாவை கலைத்து விட்டது என்று யோகாவிலிருந்து எழுந்து அவளை அடித்து நொறுக்கி விட்டார்.

குருவிக் கூடு போல் இருக்கும் இக்கால வீடுகளில் யோகா செய்ய இடமேது? மனைவி அவள் கடமையை செய்வது தவறா? அல்லது, யோகா செய்வது, கோபத்தைக் கட்டுப்படுத்தாதா?

என்னைப் பொறுத்த வரையில் மனிதன் தன் கடமையை தவறாமல் செய்தும், அடுத்தவரை புண் படுத்தாமல், ஒழுக்கமான உணவு பழக்க வழக்கத்துடன், தன்னை உணர்ந்தும் வாழ்வதுமே ஒரு சிறந்த யோகா நிலை.

No comments: