ஒன்பது ரூபாய் நோட்டு:
நேற்று, இந்த படத்தை சத்யம் காம்ப்ளெக்ஸில் பார்த்தேன். தங்கர் பச்சான் மனித உணர்வுகளை படமெடுத்து கலக்கி விட்டார். ஒரு தகப்பன் என்பவன், பிள்ளைகளுக்காக சம்பாதித்தால் மட்டும் போதாது, பிள்ளைகளை அரவணைத்தும், தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக்கொடுத்தும், வளர்க்கத்தெரியாத, அன்புள்ளம் பொங்கும், ஒன்றையும் தவறாக எடுத்துக் கொள்ளத் தெரியாத வெள்ளந்தியான பாத்திரம் ஏற்று வருகிறார் சத்யராஜ். அவருக்கு இணையாக அர்ச்சனா வெகு நன்றாக நடித்து அல்ல - வாழ்ந்து இருக்கிறார். கோவில் முன்பு, தன் கடைசி மகனின் காதலைத் தெரிந்து கொண்ட பிறகு, தனியே புலம்பும் காட்சியில் அசத்துகிறார் அர்ச்சனா!! அதையே ஒரு வசனமும் இல்லலாமல் உணர்ச்சிக்ளாலேயே உணர்துகிறார் சத்யராஜ்!.அவருக்கு இணையாக ரோகிணி, சத்யராஜுக்கு, எங்களையும், உங்களை மாதிரி, ஒருவருமற்றவராக்கி விட்டு விடாதீர்கள் என்று கூறும் போது, நம்மை கண் கலங்க வைக்கிறார். இன்னுமொறு காட்சியில் சத்யராஜ் நாசரை வழியனுப்பி வைக்கும் காட்சியில் தங்கர் நம்மை யோசிக்க வைக்கிறார். என்னதான், நண்பர்கள் என்றாலும், குடும்பத்திற்குள், நுழைந்து விட்டால், எப்படி, நட்பு, கூறு போடப்படுகிறது, என்பதை நாம் நன்கு உணர்கிறோம்.
எனக்குப் பிடித்த காட்சி : இறுதி காட்சியாக் காட்டப்படும், அந்த இளைஞன், நான் சென்னைக்கு போக வேண்டுமா என யோசிக்கிறேன், என்பது, இக்கால இளைஞர்களிடையே . பெற்றோரை, தனியே தவிக்க விடக்கூடாது, என்கிற, நிச்சயமாக சேர வேண்டிய கருத்து.
தங்கர், தரமான படத்தைக் கொடுத்து, திரும்பவும், நிரூபித்தி விட்டார், தான் யார் என்பதை!!!
நிச்சயம், பல் வேறு விருதுகளை தட்டிக் கொண்டு போகப்போகிறது, ஒன்பது ரூபாய் நோட்டு!!!
No comments:
Post a Comment