என் மன வானில்
சிறகடிக்கும் சில்லென்ற நினைவுகள்
அழ வைக்கும் கசப்புகள்
எப்போதும் அலை பாயும் மன ஓட்டங்கள்......
என்று மாற்றி மாற்றி என்னை சித்திரவதை செய்துசிதரடிக்கின்றதே!
வானில் நிலவும் இருக்கிறது
புள்ளியாய் தெரிந்து மறையும் நட்சத்திரமும் இருக்கிறது
கார் மேகங்களும் இருக்கிறது!
மனதில் குளிர்ந்த நினைவுகளும் இருக்கிறது
கரும் புள்ளிகளாய் கசப்புகளும் இருக்கிறது
வாழ்க்கை ஓட்டத்தின் கார் மேகங்களும் இருக்கிறது!
நல்ல நினைவுகளை குளிர்ந்த நிலாவாகவும்
மன ஓட்டங்களை பார்வையில் நிலைக்காமல் மறைந்து போகும் நட்சத்திரமாகவும்
கசப்புகளை கலைந்து போகும் மேகமாகவும்
பாவிக்க கற்று கொண்டிருக்கிறேன் !!!
மிகக் கடினமாகத்தான் இருக்கிறது!