Wednesday, November 5, 2008

வடிவேலு kaamedi


சில நாட்களாக, வடிவேலு காமெடியை ரொம்பவே கூர்ந்து கவனித்து வருகிறேன். இவருடைய பழைய காமெடியைப் பார்த்தாலே, வாழ்க்கையில் முன்னேற எப்படி துடித்திருக்கிறார் எனத் தெரிய வரும். தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு மனிதர் எப்படி கலக்குகிறார். பிரண்ட்ஸ் படத்தில் வரும் இவருடைய காமெடியை யாராலும் சிரித்து அனுபவிக்காமல் இருக்க முடியாது. இவருடைய காண்டிராக்ட் எடுத்து வெள்ளையடிக்கும் பாத்திரம் எனக்கு வெகுவாக சாப்ட்வேர் ப்ராஜெக்ட் மாநேஜெரை நினைவு படுத்துகிறது. ஒரு காட்சியில் தொழிலாளரை ஆணி எல்லாவற்றையும் புடுங்கும் படி கூறுவர். அதே மாதிரி சாப்ட்வேர் தயாரிக்கும் இடத்திலும் மேனேஜர், எல்லா தவறுகளையும் பிக்ஸ் பண்ண சொன்னால், ப்ரோக்ரம்மேர்ஸ் எது கிரிடிகல் எது மைனர் எது மீடியம் தவறுகள் என்று தெரியாமல் மேனேஜர் இடம் திட்டு வாங்கி கட்டிக் கொள்வார்கள். இது மாதிரி பல காட்சிகளை ரிலேட் பண்ணி சிரித்துக் கொள்ளலாம்.

இன்னுமொரு படத்தில், ஏகப் பட்ட அடி வாங்கிய பிறகும், என்னை ரொம்ப நல்லவன் என்று சொன்னார்கள், என்று பெருமைப் பட்டுக் கொள்வார். அது போல, இளித்த வாயாக அதிகம் வேலை செய்பவனே, ப்ரோக்ரம்மேர்ச்களுகிடையில் "ரொம்ப நல்லவனாவான்!!!"

உண்மையிலேயே வடிவேலு காமெடியை வைத்து ஒரு பி.ஹெச்.டிஏ பண்ணலாம்.