என் அம்மாவின் ஆசை தனது மகன் வயிற்று பேத்தியின் திருமணத்தை பார்க்கும் வரையிலும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால்பேத்தியின் கல்யாண நாள் அன்றும் உடல் நலமில்லாமல் போக வேண்டிய சூழ் நிலையாகி விட்டது. எப்படியோ என் அக்காவின் உதவியுடன் அப்போல்லோவில் ஒரு நாள் வைத்தியம் செய்து கொண்டு மணமக்களைப் பார்க்க வீடு திரும்பிவிட்டார்கள். உண்மையிலேயே என் அம்மாவின் மன உறுதியைப் பாராட்டத்தான் வேண்டும். அவர்களுக்கு இருக்கும் மன உறுதி நூற்றில் ஒரு பகுதி கூட எனக்கு கிடையாது என்றே சொல்ல வேண்டும். பேத்தியின் மணநாள் மாலையில் அவர்கள், மருத்துவ மனைக்கு சென்று வந்த சுவடே தெரியாமல் சோபாவில் உட்கார்ந்த்து இருந்ததை என்னால் என் வாழ் நாள் முழுதும் மறக்கவே முடியாது!!!
Started this blog, in the view of spending some time in the blog to let people know about me and my thoughts. The events and the references mentioned in this blog does not pin point anyone in the real life and I do not have any intention to hurt anybody through this blog. Cheer Up!! Have Fun!!! Be Cool!!!
Monday, September 29, 2008
Wednesday, September 17, 2008
கனத்த மனதோடு ஒரு கல்யாணம்!
சமீபத்தில் நான் முக்கியமான ஒரு கல்யாணத்திற்கு போக வேண்டிய கட்டாயம். கல்யாண கூடத்திற்குள் நுழையும் கணத்தில், ஒரு சிறிய யுவதி. அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து ததும்பிக் கொண்டு இருந்தது. அக் கண்ணீர், என்னை ரொம்பவும் சங்கடப் படுத்திவிட்டது. நான் ஏதோ ஒரு வகையில் அப்பெண்ணின் சொந்தம் என்பதால் அவள் கண் கலங்கியதற்கு எனக்கு காரணம் தெரியும். எனக்கும் அந்த கலக்கம் ஒட்டிக்கொண்டது. மனம் கனத்து விட்டது. அன்று காலைதான் எனது தாயும் உடல் சுகமில்லாமல் அப்போல்லோவில் அட்மிட் செய்யப்பட்டு இருந்தார். எல்லாமாகச் சேர்ந்து, கனத்த மனதோடு நான் பங்கு கொண்ட கல்யாணம் இது ஒன்றாகவே இருக்கட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொண்டு வீடு திரும்பினேன்.
அப்பெண்ணைப் பார்த்து இப்படி எனக்கு சொல்லத் தோன்றியது!
கலங்காதே பெண்ணே !
இதயம் இப்போது கனத்தாலும், உனக்கும் காத்திருக்கிறது, ஒரு நல்ல எதிர்காலம்.!!!
அப்பெண்ணைப் பார்த்து இப்படி எனக்கு சொல்லத் தோன்றியது!
கலங்காதே பெண்ணே !
இதயம் இப்போது கனத்தாலும், உனக்கும் காத்திருக்கிறது, ஒரு நல்ல எதிர்காலம்.!!!
காத்திருத்தல்
வாழ்க்கையில் நாம் ஏதாவது ஒன்றிற்கு காத்திருக்க வேண்டிய தருணங்கள் உண்டு. அவைகளில் சில மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கும் காத்திருத்தல்கள். சில மிகவும் துக்கக்தைக் கொடுக்கும் காத்திருத்தல்கள். சில கடுப்பைக் கிளப்பும் காத்திருத்தல்கள். சில நிம்மதியைக் கொடுக்கும் காத்திருத்தல்கள். நான் சந்தித்த சில காத்திருத்தல்களைக் இங்கு காண்போம்.
கடுப்பு காத்திருத்தல்கள்.
கடுப்பு காத்திருத்தல்கள்.
- மருத்துவ பரிட்ச்சைக்காக ஆஸ்பத்திரியில் காத்திருக்கும் சமயம், தெரிந்தவர்கள் மூலமாக உள்ளே நுழைவர்களைப் பார்க்கும் போது வரும் எரிச்சலும், கடுப்பும் சொல்லி மாளாது.
- பாஸ்போர்ட் அலுவலகத்தில் லைனில் காத்து நின்று கடைசியில் இது சரியில்லை, அது சரியில்லை என்று நிராகரிக்கப்படும் பொழுது வரும் கடுப்பிற்கு அளவேயில்லை.
- சரியான காலை வேளையில் அவசரமாக அலுவலகம் சென்று கொண்டிருக்கும் பொழுது, டிராபிக்க்கில் மாட்டிக்கொண்டு மெதுவாக ஊர்ந்து செல்லும் கடுப்பிற்கு நிகர் எதுவுமில்லை.
நிம்மதி/சந்தோஷமான காத்திருத்தல்கள்.
- நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று ஆர்டர் வாங்கும் தருவாய்
- பிடித்தவர்கள், விமான நிலையத்தில் தரை இறங்கியவுடன் வரும் நிம்மதியே தனிதான்.
ரயில்வே மருத்துவமனையில் ஒரு இரவுப் பொழுது
எனதன்பு அம்மா சுகமில்லாமல் சமீபத்தில் உடல் சுகமில்லாமல் போகவே ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாங்கள் எவ்வளவோ தனியார் மருத்துவமனையில் அம்மாவைச் சேர்க்க கோரியும், அப்பா கேட்கவேயில்லை. வேறு வழியின்றி எனது அக்கா அன்று அம்மாவுடன் தங்கி பணிவிடை செய்ய நேர்ந்தது விட்டது. பேருக்கு அண்ணன் என்ற உறவு பார்த்து விட்டு சென்றதாக ஞயாபகம். அடுத்த நாள், அக்கா என்னை மருத்துவமனையில் தங்க சொல்ல, நானும் சரியென்று சென்று விட்டேன்.
மருத்துவமனை என்கிற பெயரில் நான் நரகத்தை சந்தித்து விட்டேன் அன்று. எட்டு மணிக்கு அம்மாவிற்கு எடுத்து சென்ற சாப்பாட்டைக் கொடுத்து விட்டு, நானும், சாப்பிட்டுவிட்டு தட்டை அலம்பச் சென்றேன். கடவுளே! அப்படியொரு மோசமான அலம்பும் இடத்தை நான் என் ஜென்மத்தில் பார்க்கக்கூடாது. எனக்கு மயக்கமே வந்து விட்டது. பிறகு, படுக்க செல்வதற்கு முன் அம்மாவை கழிக்கும் அறைக்கு கூட்டிச் செல்லும் கட்டம். கழிக்கும் அறியா அது? கடவுளே? எனது அம்மாவை ஏன் இப்படி ஒரு இடத்தில் வந்து கிடக்க வேண்டும் என்று திட்டியே விட்டேன். அடுத்து, தூங்கும் கட்டம். படுத்த நொடியிலிருந்து ஒரே கொசுவின் ஓலம். சுத்தமாகத் தூங்க இயலவில்லை. கொசுவின் கொடிய கஷ்டத்திலும், அம்மா அயர்ந்தது தூங்கிக் கொண்டிருந்த்தார்கள், மாத்திரையின் மயக்கத்தில். நானோ சுத்தமாகத் தூங்கவேயில்லை. கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே நேரத்தை கழித்துக்கொண்டிருந்தேன். என் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. ஏன் இப்படி வயதானோர், நமது சொல் பேச்சைக் கேட்க மாட்டேன்கிறார்கள். நம்மை ஏன் எப்படி ஒரு கஷ்டத்திற்கு ஆளாகிகொண்டிருகிறார்கள்? கைபோனை எடுத்து பாட்டு கேட்கலாமென எடுத்தேன். அதுவும் பிடிக்கவில்லை. எப்படியோ இரவு பொழுது கழிந்தது. காலையும் வந்தது. திரும்பவும், அந்த கழிக்கும் அறைக்கு போகும் கட்டம், மனதை என்னவோ செய்தது. இர்ந்த்டாலும், வெளிக் காட்டிகொள்ளாமல் அம்மாவிற்கு வேண்டிய பணிவிடையைச் செய்தேன்.
நாங்கள் அக்கா தங்கை மூன்று பேரும் சேர்ந்து அம்மாவை, ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் திறன் உள்ளவர்கள்தாம். ஆனால், எனது பெற்றோரோ பெண்கள் தயவில் வாழப் பிடிக்காத பழைய எண்ணம் கொண்டவர்களாக இன்னும் இருக்கிறார்கள். என்ன செய்வது? இப்படியே அவர்களை விட்டு விடுவது தான் எங்கள் எண்ணமும். திருத்த இயலாது என்று, நாங்கள் எங்களை விட்டு கொடுத்து அவர்களுக்கு பணிவிடை செய்வது என்ற முடிவிற்கே வந்து விட்டோம்.

Subscribe to:
Posts (Atom)